ஆரம்ப பிரிவு மாணவர்களின் கல்வியறிவு : வெளியான அதிர்ச்சிகர தகவல்

ஆரம்ப பிரிவு மாணவர்களின் கல்வியறிவு : வெளியான அதிர்ச்சிகர தகவல் | The Educational Literacy Of Primary Students

மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நான்காம் மற்றும் ஐந்தாம் வருட வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களில் மூன்று வீதமான மாணவர்களே சிறந்த கல்வியை பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மாணவர்களின் கல்வியறிவு குறைவாக இருப்பதற்குக் காரணம், கொவிட் 19 தொற்றுநோய் காலத்தில், நடைமுறைக் கல்வி கற்பித்தல் மற்றும் பிற கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இடையூறுகள் ஏற்பட்டதே என மத்திய மாகாண கல்விச் செயலாளர் மேனகா ஹேரத் தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தின் நான்கு மற்றும் ஐந்தாம் வருட மாணவர்களின் எழுத்தறிவை அதிகரிக்க உலக வங்கியின் உதவியுடன் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அதற்காக ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வதாகவும் கல்விச் செயலாளர் தெரிவித்தார்.

ஆரம்பப் பிரிவில் மட்டுமன்றி 6லிருந்து 11 வருட மாணவர்களின் கல்வியறிவை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக மேனகா ஹேரத் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button