அரச பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிப்பவர்களுக்கு : மூவாயிரம் ருபாய் அபராதம்

அரச பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிப்பவர்களுக்கு : மூவாயிரம் ருபாய் அபராதம் | Passengers Without Ticket In Ctb Bus Rs 3000 Fine

இலங்கையில் அரச பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களுக்கான அபராதத்தை மூவாயிரம் ரூபாயாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளாமல் பயணிப்பவர்கள், சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டால் மூவாயிரம் ரூபாய் அபராதத்துடன், இரு மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் சுமார் 70 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அடுத்த வருடம் இந்த சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி. அல்விஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு 250 ரூபாய் அபராதமும், இரண்டு மடங்கு கட்டணமும் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button