வினாத்தாள்களை சமூக வலைத்தளங்களில் வௌியிட்டோர் மீது சட்ட நடவடிக்கை!
இந்த ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள்கள் பரீட்சையின் பின்னர் சமூக வலைத்தளங்களில் வௌியாகின.
குறித் செயலை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (15) நடைபெற்றது.
இதில் 337,956 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.