குற்றச் செயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்
ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரியளவிலான ஊழல் மேசாடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நீதிமன்றங்களுக்கு நிகரான குறிப்பிட்ட சில அதிகாரங்களை உடைய நாடாளுமன்ற அதிகாரசபை நிறுவப்பட உள்ளது.
இந்த அதிகாரசபை சுயாதீனமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு குற்றச் செயல்களில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படக் கூடிய வகையில் இந்த அதிகாரசபை நிறுவப்பட உள்ளது.
இந்த சுயாதீன அதிகாரசபை நிறுவுகை தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஊடகங்களிடம் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.