கொழும்பை வந்தடைந்த பிரம்மாண்டமான கப்பல்!
ஜேர்மனியின் “எய்டபெல்லா” (Aidabella) என்ற சொகுசு கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலில் இரண்டாயிரத்து 8 பயணிகளும், 633 பணிக்குழாமினரும் வருகைத்தந்துள்ளனர்.
அந்த கப்பலில் வருகைத்தந்த பயணிகள் கொழும்பின் பல இடங்களை பார்வையிடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
AIDA Cruises நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த கப்பல், ஆடம்பரமான தங்குமிடங்கள், பொழுதுபோக்குகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த உணவுகளுக்கு பெயர் பெற்றது.
அதன்படி 13 அடுக்குகளை கொண்டுள்ள இந்த கப்பல் 1025 விருந்தினர் அறைகள், 12 மதுபான சாலைகள், 8 நீச்சல் தடாகங்கள், 3 ஓய்வறைகள் மற்றும் 7 உணவகங்களை கொண்டுள்ளது.
மேலும், ஜெர்மனியின் பேப்பன்பர்க்கில் உள்ள மேயர் வெர்ஃப்ட் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இந்த கப்பல் 2000 ற்கும் அதிகமான பயணிகள் பயணிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.