GCC நாடுகள் முழுவதும் சுற்றிப்பார்க்க அரிய வாய்ப்பு!

ஒரே விசாவில் வளைகுடா நாடுகள் முழுவதும் சுற்றிப்பார்க்க அரிய வாய்ப்பு! | Tourist Can Travel Gulf Countries On A Single Visa

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் வளைகுடா நாடுகள் விசா நடைமுறையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது வளைகுடா நாடுகளுக்கு ஒரே விசாவில் பயணிக்கும் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சுற்றுலாப் பயணிகள் GCC நாடுகள் முழுவதும் ஒரே ஒரு சுற்றுலா விசாவில் பயணிக்க முடியும்.

பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) போன்ற நாடுகளுக்கு இடையே பயணிகள் எந்த சிரமமும் இன்றி எளிதாக செல்ல அனுமதிக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுற்றுலா விசா திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த ஒருங்கிணைந்த சுற்றுலா விசாவிற்கு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) ஒப்புதல் அளித்துள்ளது.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் 40வது உள்துறை அமைச்சர்களின் கூட்டம் ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்றது.

அப்போது GCC அமர்வின் தலைவர் சயீத் ஹமூத் பின் பைசல் அல் புசைடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

GCC நாடுகள் ஒருங்கிணைந்த சுற்றுலா விசா முறையை ஒருமனதாக அங்கீகரித்துள்ளன.

ஆறு நாடுகளுக்கான ஒருங்கிணைந்த விசா முறை 2024-25ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒருங்கிணைந்த விசா முறையின் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளின் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும் என்றும கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button