வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்!
இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க பத்து பேர் கொண்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரையின் பேரில் இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், காவல்துறை திணைக்களம், மத்திய வங்கி, திறைசேரி, இலங்கை சுங்கம், வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிபுணர் குழுவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் காற்று மாசுபாட்டில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் வாகனங்களை இறக்குமதி செய்வதில் இந்த நிபுணர் குழு கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிபுணர் குழு இதற்கு முன்னர் நான்கு தடவைகள் அதிபர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
வாகன இறக்குமதி தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய இந்த அறிக்கை அடுத்த மாதம் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.