கொழும்பு துறைமுக நகரத்தில் ஒழுங்குபடுத்தப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் !
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடுகளை ஊக்குவிக்கக் கூடிய வகையிலான மேலும் சில சட்ட ஒழுங்குவிதிகள் நிறைவேற்றப்பட இருப்பதாக முதலீட்டு மேம்பாடு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டு மேம்பாடு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் இராஜாங்க அமைச்சர் கௌரவ திலும் அமுனுகம தலைமையில் நடைபெற்றபோதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான சட்ட திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து குழு அதிகாரிகளிடம் வினவிய போது, இதற்குப் பதிலளித்த, கொழும்பு துறைமுகநகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ரெவான் விக்ரமசூரிய தெரிவிக்கையில்,
“கொழும்புத் துறைமுகத்தில் வணிக முதலீடுகளைக் கொண்டுவருவதற்குத் தேவையான சட்ட ஒழுங்கு விதிகள் சில எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும். இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன.
துறைமுக நகரில் வணிகச் செயற்பாடுகளுக்காக விசேட சட்ட ஏற்பாடுகள் காணப்பட்டாலும் நாட்டில் காணப்படும் ஏனைய சட்டங்கள் இங்கு ஏற்புடையதாகும்.