கடமைகளை பொறுப்பேற்ற சுகாதார அமைச்சின் புதிய செயலாளர்!
சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக விசேட வைத்தியர் பாலித மஹிபால இன்று (20) பதவியேற்றுள்ளார்.
அவர் இன்று காலை சுகாதார அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வைத்தியர் பாலித மஹிபால இதற்கு முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகவும் அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.