அறிமுகமாகும் புதிய முறைமை: தொடருந்து பயணிகளுக்கான தகவல்

அறிமுகமாகும் புதிய முறைமை: தொடருந்து பயணிகளுக்கான தகவல் | Https Rdmns Lk Official Side

தொடருந்து பயணிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்கும் நோக்கில் புதிய முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தொடருந்து பயணிகள் இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் RDMNS.LK என்ற இணையத்தளமானது பல புதிய அம்சங்களுடன் கொண்டுவரப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து இருக்கை முன்பதிவு பற்றிய அனைத்து தகவல்களையும் மிக எளிதாக தெரிந்து கொள்ளும் வகையிலும், தொடருந்து பெட்டிகளுக்குள் சென்று பார்க்கும் திறன், இருக்கை முன்பதிவு கட்டணம், தொடருந்து பெட்டிகளின் புகைப்படங்கள், இருக்கை வகைகள், இருக்கை எண்கள், இருக்கை முன்பதிவு வழிமுறைகள் போன்ற விபரங்களும் இந்த தளத்தில் இடம்பிடித்துள்ளன.

ஒவ்வொரு முறையிலும், காணொளிகள், காட்சிகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் தொடருந்து அட்டவணை போன்ற பல தகவல்கள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் எளிதில் அணுகக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இது தவிர, RDMNS.LK மூலம், நேரலை தொடருந்து இருப்பிடம், நேரலை தாமதம் மற்றும் வரவிருக்கும் நிலையங்களுக்கான எதிர்பார்க்கப்படும் வருகை நேரம், நேரலைச் செய்திகள் உள்ளிட்ட பல தொடருந்து தொடர்பான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button