நாடாளுமன்ற தேர்தல் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!
முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட ஒரு கருத்து கணிப்பை அடிப்படையாகக்கொண்டே அவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு நடைபெறும் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணியாகப் போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அது சாதகமாக அமையும் எனவும் சிலர் தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு (2024) தேர்தல் நிச்சயம் நடைபெறும் என அதிபர் அறிவித்துள்ள நிலையில், முதலில் அதிபர் தேர்தலா அல்லது பொதுத்தேர்தலா நடைபெறும் என்பதை என்பதை அவர் உறுதியாக அறிவிக்கவில்லை.