A/L பரீட்சை குறித்த மனு நிராகரிப்பு!
எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை கால அட்டவணையை இடைநிறுத்துவதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரிய மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வெளிப்படைத்தன்மை முன்னணியின் செயலாளர் நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணாவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பினை வழங்கிய நீதிபதி, மனுவில் கோரப்பட்ட நிவாரணத்தை வழங்க தமது நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.