ஆப்கானிஸ்தானில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் இன்று (21) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருந்து 535 கிலோ மீற்றர் தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
4.1 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் 73 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 2,500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.