நாளொன்றுக்கு 40 மில்லியன் ரூபா இழப்பு – மக்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்,மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தியதையடுத்து, களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் புதன்கிழமை மாலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், மூன்று நாட்களுக்கு தேவையான கையிருப்பு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இருப்பதாக எமக்கு தெரிவிக்கப்பட்ட போதிலும், அறியப்படாத காரணங்களால் களனிதிஸ்ஸ ஆலைக்கான எரிபொருள் விநியோகத்தை CPC இடைநிறுத்தியுள்ளது.
நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக வெஸ்ட் கோஸ்ட் பவர் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு மின் உற்பத்தி வழங்கப்பட்டுள்ளதுடன் நாளொன்றுக்கு 40 மில்லியன் ரூபா செலவாகின்றது.