விவசாய அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

விவசாய அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Important Announcement For Sl Farmers

இலங்கையில் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் கருத்துகளை பெறும் திட்டத்தை விவசாய அமைச்சு(Ministry of Agriculture) ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்க வன விலங்குகளை விரட்டும் முறைகளாக காற்று துப்பாக்கிகள் மற்றும் பாதுகாப்பு வேலிகளைப் பயன்படுத்துதல் மற்றும் புதிய பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளை அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களும் செயல்படுத்தியுள்ளன.

எனினும், இந்த திட்டம் பயிர் சேதங்களை குறைக்காத காரணத்தினால் அந்த முறைகளைத் தவிர, வேறு ஏதேனும் முறைகள் அல்லது யோசனைகள் இருந்தால், அவற்றை குறுகிய திட்ட முன்மொழிவுகளாக தயாரித்து addlsecdey@agrimin.gov என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு, அறிஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட இலங்கையின் அனைத்து குடிமக்களையும் விவசாய அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியாத பட்சத்தில் 0770440590 என்ற வட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புமாறு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த யோசனைகளை எதிர்வரும் டிசம்பர் 28ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button