உயர்தர பரீட்சை ஆரம்பம்!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2,302 பரீட்சை நிலையங்களில் உயர்தர பரீட்சை நிலையங்களில் இன்று (04) ஆரம்பமாகியது.
இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை உயர்தர பரீட்சை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பரீட்சைக்கு 346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர், அவர்களில் 281,445 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள்.
தனியார் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 65,531 என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2,302 பரீட்சை நிலையங்களில் பரீட்சையை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிடுகின்றார்.
இதே வேளை, நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்கு வர முடியாத மாணவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்களை நிறுவுவதற்கு பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெள்ளம் காரணமாக போக்குவரத்து வசதிகளை மேற்கொள்ள முடியாத மாணவர்களுக்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.