உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அர்ஜெண்டினா – பிரேசில் தோல்வி!

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அர்ஜெண்டினா - பிரேசில் தோல்வி! அதிர்ச்சியில் இரசிகர்கள் | Argentina Brazil Lose World Cup 2026 Qualifiers

2026 கால்பந்து உலக கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவும் (Argentina) 5 முறை சாம்பியனான பிரேசிலும் (Brazil) தோல்வியை சந்தித்துள்ளது.

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா (Canada), மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடக்கவுள்ளது.

மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டிகளில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும்.

தற்போது தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடக்கின்ற நிலையில் இதில் தென் அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 18 போட்டிகளில் விளையாட வேண்டும்.

லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறும்.7-வது இடத்தை பெறும் அணி பிளே-ஆப் சுற்றில் மோதும்.

எஞ்சிய 3 அணிகள் வெளியேறும். இந்த நிலையில் பரான்கியாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு போட்டியில் கொலம்பியா, ‘நம்பர் ஒன்’ அணியும், உலக சாம்பியனுமான அர்ஜென்டினாவும் மோதின.

முடிவில் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில் பராகுவே 1-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தது.

பராகுவே அணியில் வெற்றிக்குரிய கோலை 20-வது நிமிடத்தில் டியாகோ கோம்ஸ் அடித்தார்.

தொடர்ந்து தடுமாறி வரும் பிரேசில் அணியும் தோல்வியை தழுவியது. அத்துடன் 2008-ம் ஆண்டுக்கு பிறகு பராகுவேயிடம் பிரேசில் தோற்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த பிரிவில் ஒவ்வொரு அணியும் இதுவரை தலா 8 ஆட்டங்களில் விளையாடியுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button