அரியானாவில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம்
அரியானாவின் சோனிபத் நகரில் இன்று (26) அதிகாலை 4 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவு கோலில் 3.0 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
5 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்க மையம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்ட விபரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.