அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல் - இம்மாத இறுதியில் நிறைவு | Government Employee Salary Aswesuma Scheme

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான ஆட்சேபனைகள் மீதான பரிசீலனைகள் இம்மாதம் நிறைவடையுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (09.08.2023) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

20 இலட்சம் குடும்பங்களுக்கு நன்மைகளை வழங்குவதே அஸ்வெசும திட்டத்தின் நோக்கம் என சுட்டிக்காட்டிய அவர் பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மாதாந்தம் 5.2 பில்லியன் ரூபா பணம் செலவிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, ​​இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 38 வீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, அஸ்வெசும சமூக நலன்புரித் திட்ட உதவிகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தற்போது பிரதேச செயலாளர்களின் தலைமையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணியை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button