அவுஸ்திரேலியாவில் குடியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
அவுஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2024 ஜூன் 30, நிலவரப்படி, அவுஸ்திரேலியாவின் மதிப்பிடப்பட்ட குடியிருப்பாளர் மக்கள் தொகை 27.2 மில்லியன்களாகும்.
இதில் அவுஸ்திரேலியாவில் பிறந்தவர்கள் 18.6 மில்லியன் பேர் மற்றும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் 8.6 மில்லியன் பேர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 2024 இன் கணக்கெடுப்பின்படி, இலங்கையில் பிறந்தவர்கள் 172 ஆயிரம் பேர் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2024 வரையிலான 10 ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டில் பிறந்த மக்கள் தொகையில் மிகப்பெரிய அதிகரிப்பு இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் நேபாளத்தில் பிறந்தவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்கா சர்வதேச புலம்பெயர்ந்தோரின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்டிருக்கிறது.
இதன்படி, அமெரிக்காவில், வசிப்போரில், அந்த நாட்டுக்கு வெளியே பிறந்தவர்கள் 52.4 மில்லியன் பேர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.