வெதுப்பக பொருட்களுக்கான விலை தொடர்பில் வெளியான தகவல்
வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், வெதுப்பக உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப் போவதில்லை என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக கைத்தொழிலை பராமரிக்கும் திறன் இல்லை என வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.