இலங்கையில் பெரிய நில அதிர்வுகள் ஏற்படலாம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இந்தோனேசியா அவுஸ்திரேலிய கண்டத் தட்டுக்களின் நகர்வு காரணமாக எதிர்காலத்தில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் பாதிப்பை இலங்கையும் எதிர்கொள்ளும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புத்தல, வெல்லவாய மற்றும் மொனராகலையின் பல பகுதிகளில் பதிவான நில நடுக்கமானது கண்டத் தட்டுக்களின் நகர்வின் காரணமாக ஏற்பட்டதாக பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலிய கண்டத் தட்டுக்கள் இரண்டாகப் பிளவுபட ஆரம்பித்துள்ளதாகவும், கடந்த 15 முதல் 20 ஆண்டுகளில் பிளவுபடும் வீதம் வேகமாக அதிகரித்து வருவதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த காலங்களில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட பாரிய நில நடுக்கமும் பூமியின் மேற்பரப்பில் புதிய தட்டு எல்லையை உருவாக்குவதற்கான அறிகுறியை காட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.