இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா!
இலங்கையின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த பறவைகள் பூங்கா கண்டி ஹந்தானையில் உருவாக்கப்பட்டுள்ளது.
“ஹந்தானை சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையம்” என அழைக்கப்படவுள்ள குறித்த பூங்கா, அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நாளைய தினம் பிற்பகல் 03.00 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த பறவைகள் பூங்காவானது புலம்பெயர்ந்து வரும் பல பறவைகளின் இருப்பிடமாக உள்ளதுடன், காயமடைந்த பறவைகளுக்கு சிகிச்சை அளித்து விடுவிக்கும் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த பூங்காவை அபிவிருத்தி செய்வதற்காக 490 மில்லியன் ரூபாவை இலங்கை அரசாங்கம் இதுவரை செலவு செய்துள்ளது.
வித்தியாசமான பல வெளிநாட்டு பறவைகள் இங்கு உள்ளதுடன், அவற்றை பராமரிக்க நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.