பாணின் விலை குறைப்புத் தொடர்பில் வெளியாகியுள்ள அறவிப்பு!

பாணின் விலை குறைப்புத் தொடர்பில் வெளியாகியுள்ள அறவிப்பு! | Bread Price Reduced Bakery Sri Lanka Cash

பேக்கரி பொருட்களின் விலையை குறைத்தால் மட்டுமே தற்போது முடங்கியுள்ள பேக்கரி தொழிலை மீட்டெடுக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விற்பனை நூறு வீதம் குறைவடைந்துள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது பாண் ஒன்றின் விலை 150, 160, 170 எனவும் சில பிரதேசங்களில் 180 ரூபாயிற்கும் விற்பனை செய்யப்படுவதால் விற்பனை நூறு வீதம் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாணின் விலை குறைப்புத் தொடர்பில் வெளியாகியுள்ள அறவிப்பு! | Bread Price Reduced Bakery Sri Lanka Cash

ஆகவே குறைந்தபட்சம் பாணின் விலை 100 ரூபாயாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

அதுமட்டுமன்றி தற்போது, மின் கட்டண உயர்வால், பேக்கரி தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, பேக்கரி தொழில் நலிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் ஜயவர்தன தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button