பாணின் நிறை குறைந்தால் வர்த்தகர்களுக்கு பத்தாயிரம் அபராதம்

பாணின் நிறை குறைந்தால் வர்த்தகர்களுக்கு பத்தாயிரம் அபராதம் | 10000 Rs Penalty To Traders If Bresd Mass Decrease

நாட்டில் ஒரு பாண் இறாத்தலுக்கு தேவையான எடை இல்லை என்றால் குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நீரியெல்ல தெரிவித்துள்ளார்.

பாண் இறாத்தல் ஒன்றின் எடை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் (02) வெளியிடப்பட்டது.

அதன்படி, பாண் இறாத்தல் ஒன்றிற்காக 450 கிராம் எனவும் அரை இறாத்தல் பாணிற்கான நிகர எடை 225 கிராமாக இருத்தல் அவசியம் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே குறித்த எடை காட்சிப்படுத்தப்பட வேண்டுமென அந்த சபையினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறைக்கு அமைய பாண் விற்பனையில் ஈடுபடாத வர்ததகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button