கட்டுமான செலவுகள் 20 சதவீதத்தினால் உயர்வு!

கட்டுமான செலவுகள் 20 சதவீதத்தினால் உயர்வு | Onstruction Expenses Up By 20
இலங்கையில் கட்டுமான செலவுகள் 20 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த முதலாம் திகதி தொடக்கம் பெறுமதி சேர் வரி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பெறுமதி சேர் வரி அறவீடு காரணமாக இவ்வாறு கட்டுமான செலவுகள் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத் தொழிற்துறை பாரியளவு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தேசிய கட்டுமான ஒன்றியத்தின் தலைவர் எம்.டி.போல் தெரிவித்துள்ளார்.

எரிபொருட்களுக்கு பெறுமதி சேர் வரி விதிக்கப்படுவதனால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இயந்திர சாதனங்கள், மின்குமிழ்கள், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரி விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் கட்டுமானத் தொழிற்துறையின் செலவுகள் 20 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button