கனடாவில் வேலை தேடுபவரா நீங்கள்: கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புக்கள்..!
கனடாவில் கடந்த ஏப்ரல் மாதம் 41000 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உருவாக்கப்பட்ட தொழில் வாய்ப்புக்களில் அதிக எண்ணிக்கையிலானவை பகுதி நேர வேலை வாய்ப்புக்களாகும்.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்புக்களில் அதிகளவான வேலை வாய்ப்புக்கள் ஒன்றாரியோ மாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மாகாணத்தில் சுமார் 33000 புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முழு நேர பணிகளில் ஈடுபடுவதற்கு பலரும் விரும்பிய போதிலும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.