கோழி இறைச்சி, முட்டை மற்றும் மீனின் விலைகளில் மாற்றம்
கோழி இறைச்சி, முட்டை மற்றும் மீன் ஆகியவற்றின் விலைகள் துரிதமாக அதிகரித்து வருவது தொடர்பில் அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
1,000 முதல் 1,100 ரூபா வரையில் இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை தற்போது 1,500 முதல் 1,600 ரூபா வரை உள்ளதாக நுகர்வோர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை சந்தையில் மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ள நிலையில் இன்று (30) பேலியகொட மத்திய மீன் சந்தையில் சில வகை மீன்களின் விலைகள் கிட்டத்தட்ட 2,000 ரூபாவை எட்டியுள்ளது.
முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை இருந்த போதிலும் வெள்ளை முட்டைகள் சந்தையில் இன்னும் 55 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
சந்தையில் சிவப்பு நிற முட்டை ஒன்று 60 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.