விளையாட்டு பொருட்களால் குழந்தைகளுக்கு ஆபத்து: பெற்றோருக்கு எச்சரிக்கை

விளையாட்டு பொருட்களால் குழந்தைகளுக்கு ஆபத்து: பெற்றோருக்கு எச்சரிக்கை | Warning To Parents About Danger To Children Toys

சந்தையில் விற்கப்படும் பேட்டரியில் இயங்கும் பொம்மைகள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை அரச வைத்தியர்கள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ச (palitha rajapaksha) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில். இந்த பொம்மைகளில் லித்தியம் (Lithium), சில்வர் ஆக்சைடு (Silver oxide)மற்றும் அல்கலைன் (Alkaline) பட்டன் பேட்டரிகள் (Button batteries) இருப்பதால், குழந்தைகள் அவற்றை விழுங்கலாம், காது அல்லது மூக்கில் வைக்கலாம் என்று வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த மின்கலங்களை குழந்தைகள் விழுங்கினால், அதன் மின் இரசாயனச் செயற்பாட்டின் ஊடாக குழந்தைக்கு உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடும் என வைத்தியர் பாலித ராஜபக்ச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவுப் பாதையின் முதல் பகுதி இயற்கையாகவே குறுகலாக இருப்பதால், இவற்றை விழுங்கும்போது அதிகபட்ச சேதம் ஏற்படக்கூடும்.

அத்துடன் , விழுங்கப்பட்ட பேட்டரி வயிற்றில் பயணித்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதனூடாக வயிற்றில் பல பாதிப்புகள் ஏற்படுவதுடன், சுவாசக் குழாய் அடைப்பு காரணமாக உயிரிழப்புக்கள் கூட ஏற்படலாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறு குழந்தையொன்று இவ்வாறான விபத்தில் சிக்கினால் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறும், அதுவரை 10 நிமிடங்களுக்கு 2 டீஸ்பூன் சுத்தமான தேனை குழந்தைக்கு முதலுதவியாக வழங்குமாறும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button