அமெரிக்காவிற்குள் ஊடுருவும் உளவு பலூன்! சீனாவால் ஏற்பட்ட பரபரப்பு!
அமெரிக்காவில் இராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ள மொன்டானா பகுதியில், சீனாவைச் சேர்ந்த உளவு பலூன் பறப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும்போது பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த முயற்சியை அமெரிக்க ராணுவம் கைவிட்டது.
எனினும் அதன் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன், தனது சீன பயணத்தை ஒத்திவைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீன அதிகாரிகளுடனான தனது சந்திப்புகளின்போது, இந்த பலூன் விவகாரம் ஆதிக்கம் செலுத்துவதை பிளிங்கன் விரும்பவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக தெரியவந்துள்ளது.