இலங்கையில் சொக்லேட் பிரியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

chocolate import

மனித பாவனைக்கு பொருத்தமற்ற சொக்லேட் கையிருப்பானது ஹலவத்த நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஹலவத்த நகரில் உள்ள மூன்று கடைகளில் மனிதர்கள் சாப்பிடுவதற்குத் பொருத்தமற்ற சொக்லேட் கையிருப்பு இருப்பதைக் கண்டுபிடித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைதொடர்ந்து ஹலவத்த உயர் நீதிமன்றத்தில் குறித்த கடைகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் இனிப்புகள் மற்றும் சொக்லேட்டுகளின் காலாவதி திகதி, உற்பத்தி திகதி போன்ற முக்கிய தகவல்களை குறிப்பிடாமல் இலங்கை முழுவதும் உள்ள சில கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, மனித பாவனைக்கு பொருத்தமற்ற சாக்லேட் விற்பனை செய்யும் இடங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கையை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அண்மையில் ஆரம்பித்திருந்தனர்.

அதன் கீழ் ஹலவத்த பகுதியில் முதல் சோதனை நடத்தப்பட்டது.

இலங்கையில் சொக்லேட் பிரியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..! | Chocolate Lovers Warning Given In Lanka People

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரமற்ற சொக்லேட் மற்றும் இனிப்பு வகைகளை நாடளாவிய ரீதியில் விற்பனை செய்யும் இடங்களில் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இவ்வாறு சட்டவிரோத முறையில் கொண்டு வரப்படும் சொக்லைட்டுக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button