100க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்கள் மூடப்படும்! வெளியான தகவல்
100க்கும் மேற்பட்ட திணைக்களங்கள், ஏஜென்சிகள் மற்றும் ஆலோசனை வாரியங்களின் சேவைகள் தேவை இல்லை அல்லது தற்போதுள்ள நிறுவனங்களால் செய்யப்படலாம் என்று தெரியவந்ததை அடுத்து, அவற்றின் அதிகாரங்களை அரசாங்கம் முடக்கும் அல்லது மாற்றும் என்று ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறைந்தபட்சம் 50 திணைக்களங்கள், ஏஜென்சிகள் மற்றும் ஆலோசனை வாரியங்கள் மூடப்படுவதற்கு பட்டியலிடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இன்னும் 50 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட உள்ளன.’
நிறுவனங்களை மூடுவதற்கான முடிவை எடுப்பதில் அதிக செலவுகள், கடமைகள் மற்றும் அவற்றின் செயல்திறன் ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட்டன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.