கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ள அமைதிப்பணிக்கான கப்பல்.

கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ள அமைதிப்பணிக்கான கப்பல் | The Indonesian Warship Kri Sultan Iskanda

அமைதி காக்கும் பணிக்காக லெபனானுக்குச் செல்லும் இந்தோனேசிய போர்க்கப்பலான KRI சுல்தான் இஸ்கந்தர் மூடா-367 நேற்று சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கடற்படை மரபுகளின்படி இந்தக் கப்பலை இலங்கை கடற்படை வரவேற்றது. இந்தக்கப்பல் 120 பணியாளர்களைக் கொண்ட 90.71 மீட்டர் நீளமுடையது.

அதிகாரப்பூர்வ வருகையை முடித்துக்கொண்டு, KRI சுல்தான் இஸ்கந்தர் மூடா-367 டிசம்பர் 30 ஆம் திகதியன்று நாட்டை விட்டுப் புறப்பட உள்ளது.

இந்தநிலையில், இஸ்ரேலிய இராணுவத்திற்கும் ஆயுதமேந்திய போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் இடையே லெபனானில் ஆயுத மோதல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, கப்பலின் குழுவினர் அனைத்து வகையான அச்சுறுத்தல்களுக்கும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்தோனேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button