நிலநடுக்கத்தால் கொழும்பிற்கு ஏற்படவுள்ள ஆபத்து
இந்தியாவில் பாரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டால் அது இலங்கையின் கொழும்பு நகரை பாதிக்க வாய்ப்புள்ளதாக புவியியல் துறை பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வடபகுதிகளில் எதிர்வரும் வாரத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அப்படி ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டால் இலங்கையில் உள்ள கொழும்பிலும் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.
சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் வட பகுதியில் ஏற்பட்ட 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கொழும்பின் கட்டிடங்களை குலுங்கியது.
மேலும், இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால், இந்தியாவில் உள்ள பல நூறு ஆண்டுகள் பழமையான கட்டிடங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.