நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் நடைமுறையாகும் புதிய திட்டம்.
நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இன்றைய தினம் (30.07.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, முன்னோடித் திட்டமாகக் காகிதமில்லா டிஜிட்டல் நீதிமன்றம் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் பிரேரணையின் பிரகாரம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாகக் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
நீதி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.சஞ்சீவ சோமரத்ன ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிகையில் கூறப்பட்டுள்ளது.