அரச நிறுவனங்களில் தரவுகள் அற்றுப்போகும் அபாயம்!

சிறிலங்காவின் அரச நிறுவனங்களில் தரவுகள் அற்றுப்போகும் அபாயம் | Massive Ransomware Attack State Email Domain Icra

பாரிய சைபர் தாக்குதல் காரணமாக சிறிலங்காவின் அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அதிகளவிலான தரவுகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்(ICTA )இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியது.

இந்த வருடம் மே மாதம் 17 ஆம் திகதி மற்றும் ஆகஸ்ட் 26 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பாரிய வைரஸ் தாக்குதல் காரணமாகவே இந்த தரவுகள் அற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய gov.lk என்ற மின்னஞ்சலை பயன்படுத்தும் அனைத்து அரச அலுவலகங்களிலும் தரவுகள் அற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் கூறுகின்றது.

gov.lk என்ற மின்னஞ்சலை பயன்படுத்தும் அரச நிறுவனங்களில் அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட இராஜாங்க அமைச்சுகள் பல உள்ளன.

இந்த மின்னஞ்சல் ஊடாக மிகவும் முக்கிய அரச தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button