இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க வழக்கில் சிக்கல்!
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின், சட்டச் செலவுகளை நியூ சவுத் வேல்ஸ் சட்ட அதிகாரிகளே செலுத்த வேண்டும் என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.
தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு விசாரணை தொடர்ந்து தாமதமாகி வருவதால், உரிய அதிகாரிகள் நீதிமன்ற கட்டணத்தை செலுத்த வேண்டும் என தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு நேற்று (04.05.2023) அவுஸ்திரேலியாவின் சிட்னி நீதிமன்றில் அழைக்கப்பட்ட போதே தனுஷ்கவின் சட்டத்தரணி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதன்படி, பிணை கோரிக்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமையினால் தனுஷ்க குணதிலக்க எதிர்நோக்கும் சிக்கல்களையும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி, இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனுஷ்க குணதிலக்க, கடந்த வருடம் நடைபெற்ற T20 உலகக் கிண்ணப்போட்டியில் பங்குபற்றுவதற்காக சிட்னியில் யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.