19,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
பொருளாதார மந்தநிலை, வருவாய் பற்றாக்குறை, பணவீக்கம் போன்ற காரணங்களால் பேஸ்புக், டுவிட்டர், அமேசான் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை குறைத்துள்ளன.
அவ்வகையில், பொருளாதார சூழல் காரணமாக முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அசெஞ்சர் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்குகிறது. அசெஞ்சர் நிறுவனம், அதன் ஆண்டு வருவாய் மற்றும் லாபம் குறைவாக இருக்கும் என கணித்துள்ள நிலையில், மொத்த ஊழியர்களில் 2.5 சதவீதம், அதாவது சுமார் 19,000 ஊழியர்களை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அசெஞ்சர் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் வளர்ச்சியானது, 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கிறது. இது முந்தைய கணிப்புடன் ஒப்பிடுகையில் சற்று குறைவு. 8 சதவீதம் முதல் 11 சதவீதம் வரை வருவாய் வளர்ச்சி இருக்கும் என்று முன்பு கணிக்கப்பட்டது.
இதேபோல் பங்கு ஆதாயம், ஒரு பங்கிற்கு 11.2 டொலர் முதல் 11.52 டொலர் வரை இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது 10.84 டொலர் முதல் 11.06 டொலர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.