இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் டெங்கு நோயால் எட்டு மரணங்கள் சம்பவித்துள்ளது.
அத்துடன் டெங்கு நோயாளார்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜனவரியில் 10417 டெங்கு நோயாளர்களும் பெப்ரவரியில் 6007 டெங்கு நோயாளர்களும் மற்றும் மார்ச்சில் 3615 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இந்நிலையில், மேல் மாகாணத்தில் 7211 டெங்கு நோயாளர்களும் கிழக்கு மாகாணத்தில் 4215 டெங்கு நோயாளர்களும் மற்றும் மத்திய மாகாணத்தில் 1585 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.