1,000 மில்லியன் டொலர்களை கொள்வனவு செய்த இலங்கை!
இலங்கை மத்திய வங்கி கடந்த மார்ச் மாதம் 453.06 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செலாவணி சந்தையில் இவ்வாறு டொலர்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் 348.79 மில்லியன் டொலர்களையும், பெப்ரவரி மாதம் 287 டொலர்களையும் மத்திய வங்கி கொள்வனவு செய்துள்ளது.
ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மத்திய வங்கி மொத்தமாக 1088.85 மில்லியன் டொலர்களை கொள்வனவு செய்துள்ளது.
அத்துடன், இந்தக் காலப் பகுதியில் 226.17 மில்லியன் டொலர்களை விற்பனை செய்துள்ளது.
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.