டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (14) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 308 ரூபாய் 26 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 318 ரூபாய் 16 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபாய் 86 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 402 ரூபாய் 33 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபாய் 76 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 342 ரூபாய் 49 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபாய் 94 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 235 ரூபாய் 80 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபாய் 35 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 207 ரூபாய் 40 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபாய் 75 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 237 ரூபாய் 06 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 308.18 ரூபாயிலிருந்து 307.69 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 318.92 ரூபாயிலிருந்து 318.41 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 307.49 ரூபாயிலிருந்து 306.99 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 317.50 ரூபாயிலிருந்து  317 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 309  ரூபாயிலிருந்து  308.50 ரூபாய் மற்றும் 318 ரூபாயிலிருந்து 317.50 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button