டொலர் அதிகரிப்பு – தங்கத்தின் விலை?
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335.41 ரூபாவாகவும், கொள்வனவு விலை 317.72 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இன்று (31) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 163,800 ரூபாவாக அதிகரித்துள்ளது.
161,000 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 2,800 ரூபாவால் இவ்வாறு அதிகரித்துள்ளது.
இதனிடையே நேற்று (30) 175,000 ரூபாவாக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கம், இன்றைய தினம் 178,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.