மீண்டும் அதிகரிக்கும் டொலரின் பெறுமதி – இன்றைய அறிவிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கணிசமாக அதிகரித்த நிலையில் இந்த வாரம் இலங்கை ரூபாவின் பெறுமதி பின்னடைவை சந்தித்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு இன்று மேலும் வலுவிழந்துள்ளது.
இன்றைய தினம் டொலரொன்றின் கொள்வனவு விலை 320 ரூபாவாகவும், விற்பனை விலை 340 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் நேற்றை நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.86 ரூபாவாகவும், கொள்வனவு விலை 311.82 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
மேலும், இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (14) வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.