குறைவடையும் டொலர் விலை குறித்து வெளியான தகவல்.!

இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 5.6% சதவீதத்தால் வலுப்பெற்றுள்ளதுடன் இன்று அதன் கொள்முதல் விலை 300 ரூபாவாக பதிவாகியிருந்தது.

எனினும், ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து வரும் நேரத்தில், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டில், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மிக அதிக அளவில், அதாவது 44.8% குறைந்து, நாட்டின் பொருளாதாரத்தை கடுமையான மந்த நிலைக்கு இழுத்துச் சென்றது.

அதன்படி, 2022 நவம்பரில், அமெரிக்க டொலரின் விலை 363 50 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் அதன் கொள்முதல் விலை 360 99 ரூபாவாகவும் விற்பனை விலை 371 83 ரூபாவாகவும் பதிவானது.

எவ்வாறாயினும், தற்போது நாட்டின் வணிக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 305 ரூபா 64 சதமாக பதிவாகியுள்ள நிலையில், அதன் கொள்முதல் விலை 300 ரூபா 60 சதமாகவும் மற்றும் விற்பனை விலை 310 ரூபா 20 சதமாகவும் காணப்படுகிறது.

அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 12.1% ஆகவும், இந்த வருடத்தின் மூன்று மாதங்களில் ரூபாயின் பெறுமதி 5.6% ஆகவும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், மாற்று விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களின் பயனை வாடிக்கையாளருக்குப் பெற்றுக் கொடுப்பதற்கான முறைமை விரைவாக தயாரிக்கப்பட வேண்டும் என அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button