ஐ.பி.எல் வரலாற்றில் டோனி படைத்த சாதனை

ஐ.பி.எல் வரலாற்றில் டோனி படைத்த சாதனை | Ms Dhoni Breaks Record In Ipl

ஐ.பி.எல் (IPL) வரலாற்றில் அனைத்து அணிகளாலும் ஏலம் கேட்கப்பட்ட ஒரே வீரராக எம்.எஸ். டோனி (MS.Dhoni) திகழ்கிறார்.

2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரானது 18 ஆவது சீசன் என்ற அடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தொடரில் மொத்தமாக 74 போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் முதல் சீசனில் இந்திய அணியின் முன்னாள் தலைவரான டோனியை எடுக்க 8 அணிகளும் போட்டி போட்டன.

ஒருகட்டத்தில் டோனியின் விலை 7 கோடியை தாண்டியது. இதனால் ஒவ்வொரு அணிகளாக பின்வாங்க தொடங்கின.

ஆனாலும் சென்னை மற்றும் மும்பை இடையே கடும் போட்டி நிலவியது.

ஏல தொகை 12 கோடி என்ற மதிப்பிற்கு வந்ததும், இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி டோனியை ஏலத்தில் எடுத்தது.

வரலாற்றில் இதுவே ஒரு வீரரை ஏலம் எடுக்க அனைத்து அணிகளும் போட்டி போட்டி சம்பவமாக பதிவாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button