இலங்கை மக்களின் குடிநீர் தொடர்பில் வெளிவரும் தகவல்.
இலங்கை மக்கள் தொகையில் ஏறக்குறைய 67 சதவீத மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
குடிநீரின் தரம் குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு மற்றும் யுனிசெப் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தும் போதே பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
நாட்டின் 25 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற, கிராமப்புற மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளை உள்ளடக்கிய 3210 வீடுகளின் மாதிரிகளை பயன்படுத்தி இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.