இலங்கையில் பதிவாகப்போகும் நிலநடுக்கங்கள் குறித்து வெளியான தகவல்
நாட்டில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட புவியியலாளர் தனுஷ்க ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கை அமைந்துள்ள இந்திய – அவுஸ்திரேலிய தட்டுக்கும் மேலே அமைந்துள்ள ஆசிய தட்டுக்கும் இடையில் நேற்று பகல் முழுவதும் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த நிலநடுக்கங்கள் பற்றிய ஆய்வில் நாம் குறிப்பிடக்கூடிய காரணிதான் நேற்று நாள் பூராகவும் இலங்கை அமைந்துள்ள இந்திய – அவுஸ்திரேலிய தட்டு மற்றும் மேலே உள்ள ஆசிய தட்டுக்கு இடையே 4 – 5 ரிக்டர் அளவில் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2, 2.5, 3, 3.5 போன்ற நிலநடுக்கங்கள் எதிர்காலத்திலும் நடக்கலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.