இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையின் பொருளாதாரம் மேலும் மோசமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
சரிந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை நிமிர்த்தி பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு, இலங்கை அரசு சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
இருப்பினும், சர்வதேச நாணய நிதியம் பல நிபந்தனைகளை இலங்கைக்கு விதித்திருந்தது, இதனால் நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை அரசு கோரியுள்ள நிதியைப் பெறுவதில் கால தாமதங்கள் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இம்மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை இலங்கை பெற்றுக் கொள்ளாவிட்டால், நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமான நிலையை அடையும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எச்சரித்துள்ளார்.