அனுமதி வழங்கப்பட மாட்டாது! கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு
முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாத ஆசிரியர்களால் முன்பள்ளிகளை ஆரம்பிக்க எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்பட மாட்டாது என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
கடுவலையிலுள்ள பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தற்போது நாடு முழுவதும் 19 ஆயிரம் முன்பள்ளிகள் உள்ளதுடன், அதில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
சகல முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் முறையான டிப்ளோமா பயிற்சியும் வழங்கப்படும்.
எதிர்காலத்தில் முறையான சான்றிதழ்களின் அடிப்படையில் மாத்திரமே முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.