முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி!
சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஒரு முட்டையின் விலை ரூ.26 முதல் 30 வரையிலும் கோழி இறைச்சி கிலோகிராம் ஒன்றின் விலை ரூ.650 முதல் 850 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முட்டை மற்றும் கோழி உற்பத்தி அதிகரித்துள்ளதாலும் தேவை குறைந்ததாலும் விலைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சிறப்பு அங்காடிகளில் பத்து முட்டைகள் கொண்ட ஒரு பொதி ரூ.500 முதல் 520 வரை விற்கப்படுவதாகவும் நுகர்வோர் கூறியுள்ளனர்.
அத்தோடு, கோழி இறைச்சி கிலோகிராம் ஒன்று 600 ரூபாய் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.